முகநூல் கணக்குகளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Friday, March 29th, 2019

தேவையற்ற உபயோகத்தில் இருக்கும் முகநூல் (facebook) பக்கங்களை அழிக்க முகநூல் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு இனங்காணப்படும் முகநூல் பக்கங்கள் (facebook page) 2,632க்கும் அதிகளவான முகநூல் கணக்குகள் (facebook account) மற்றும் முகநூல் குழுக்கள் (facebook group) ஆகியவை தற்போது அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஈரான் நாட்டு கணக்குகள் 513, ரஷ்யா தொடர்பிலான கணக்குகள் 1,907 ஆகியவை அழிக்கப்பட்டு உள்ளதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

மத மற்றும் தேசியம் தொடர்பிலான இனவாதக் கருத்துக்களை பரப்பும் மற்றும் பாலியல் ரீதியிலான காணொளிகள் உள்வாங்கப்பட்டுள்ள முகநூல் கணக்குகள் ஆகியவற்றையும் அழிக்க முகநூல் நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: