முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே இலங்கை இன்னும் உள்ளது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Monday, February 21st, 2022

முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே இலங்கை இன்னும் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் 60 முதல் 70 வயதிற்கு இடைப்பட்ட 65 சதவீதமானவர்கள் எந்தவொரு கொவிட் தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம்  நாட்டில் தற்போது 40 சதவீதமானவர்களுக்கே செயலூக்கி செலுத்தப்பட்டுள்ளது. அது 75 முதல் 80 சதவீதத்தினை அடையும் போது, சில தளர்வுகளை மேற்கொள்ள முடியும்.

எனவே உரிய வகையில் முகக்கவசம் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய நாளில் 22 ஆயிரத்து 977 பேருக்கு, பைஃஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 64 இலட்சத்து 89 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

அரசியல் அதிகாரம் எமது கைகளில் இருந்திருந்தால் மக்கள் இன்று வீதிக்கிறங்கவேண்டிய நிலை உருவாகியிருக்காத...
விதிமுறையை மீறிய குற்றச்சாட்டு: கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரம் செய்த ஆறு வ...
வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல ஒத்துழைப்பும் அரசாங்கம் வழங்கும் – ...