முகக்கவசம் அணியாத நபர்களுக்கு பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியிலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலும் நாளை திங்கட்கிழமைமுதல் முகக்கவசம் அணியாத மற்றும் முறையாக முகக்கவசம் அணியாத நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசேட கண்காணிப்புக்களில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 149 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதிமுதல் இது வரையில் 52,ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 6,000 பேருக்கு எதிராக எதிர்வரும் தினங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|