முகக்கவசம் அணியாத இருவருக்கு இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணை – புறக்கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

Friday, October 16th, 2020

கொரோனா பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் முகக்கவசம் அணியாமல் விடுதியில் தங்கியிருந்த இளைஞர் மற்றும் யுவதியை தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க புறக்கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பகுதியில் தங்கும் விடுதி ஒன்றில் முகக்கவசம் அணியாமலிருந்த இளைஞர் மற்றும் யுவதியை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பரவும் விதத்தில் செயற்பட்டார்களென அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இருவரும் தாங்கள் கொரோனா தொற்று பரவும் விதத்தில் செயற் பட வில்லையென நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து வழக்கு ஜனவரி 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இருவரும் மதிய உணவை உண்பதற்காகவே முகக்கவசம் அணியாமல் இருந்ததாக அவர்களது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் இருவரையும் இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க புறக்கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: