முகக்கவசம் அணியாதவர்களுக்கு சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக பி.சி.ஆர் பரிசோதனை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, January 5th, 2021

முகக்கவசம் அணியாதவர்களை சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இன்று பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, இன்றுமுதல் பி.சீ.ஆர். மற்றும் ரெபிட் அண்டிஜன் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இதனிடையே முகக்கவசம் அணியத் தவறிய மற்றும் கொரோனா சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரப் பகுதியில் 74 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிமுதல் இதுவரை 2,172 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: