முகக்கவசங்களை பயன்படுத்திய பின் எரித்து விடுங்கள் : பேராசிரியர் அஜந்த பெரேரா வலியுறுத்து!

Monday, August 16th, 2021

முகக் கவசங்களைப் பயன்படுத்திய பின்னர், அவற்றை குப்பைகளில் போட வேண்டாமெனவும் அவற்றை எரிக்க வேண்டும் எனவும் பேராசிரியர் அஜந்த பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டிலுள்ள அனைத்து மக்களும் முகக் கவசங்களைப் பயன்படுத்துகிறார்கள். பலர் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மாத்திரமே முகக் கவசத்தைப் பயன்படுத்துகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பல மில்லியன் கணக்கான முகக் கவசங்கள் வீசப்படுகின்றன. பலர் எந்தவிதமான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களையும் பின்பற்றாது, முகக் கவசங்களை வீசி எறிகின்றனர். முகக்கவசங்களை வீசும்போது, அவற்றை கொதிக்கும் நீரில் அவித்துவிட்டு அல்லது கிருமி நாசினி கொண்டு அவற்றைக் கழுவி விட்டு அகற்ற வேண்டும்.

கண்ட இடங்களில் முகக் கவசங்களை பொதுமக்கள் வீசக் கூடாது. தங்களை மாத்திரம் முகக் கவசம் பாதுகாத்தால் போதுமென்ற மனநிலையில் இருக்கும் இலங்கையர்கள் பலர் முகக்கவசங்களைப் பயன்படுத்தியதன் பின்னர் கண்ட இடங்களில் வீசுகின்றனர். முகக்கவசங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவுமென்பதால், சுகாதாரப் பாதுகாப்பு அறிவுத்தல்களுக்கு அமைய முகக் கவசங்களைப் பாதுகாப்பாக அகற்ற வேண்டும். அல்லது அவற்றை எரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: