முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முக மறைப்புக்களும் தடை – அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, April 27th, 2021

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முக மறைப்புக்களையும் தடை செய்தவற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் சரத் வீரசேகர புர்காவிற்கு தடை விதிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்த நிலையில் துறைசார்  தரப்பினருடன் முறையான ஆலோசனை மேற்கொண்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் கூறியிருந்தது இந்நிலையிலேயே இன்று குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: