மீள திறக்கப்பட்டது தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் !

Wednesday, May 5th, 2021

கொரோனா தொற்று நிலைமை காரணமாக கடந்த 26 ஆம் திகதி மூடப்பட்ட தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று மீளவும் திறக்கப்பட்டது.

அதிகாலை 05 மணிமுதல் மாலை 05 மணி வரை மாத்திரம் பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படவுள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றும் (05) நாளையும் (06) மாத்தளை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மாத்திரம் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: