மீள அறிவிக்கும் வரை வீடுகளை நோக்கி செல்ல வேண்டாம்  – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!

Thursday, May 24th, 2018

கடந்த 6 மணித்தியாலங்களுக்குள் மழையுடன் களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் இயக்குனர் மாலா அலவதுகொட தெரிவித்துள்ளார்..

இதனுடன் மழையுடன் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

மழையுடன் மீண்டும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் மேடு சரிந்து விழும் அபாயம் இருப்பதால் மீள அறிவிக்கும் வரை வீடுகளை நோக்கி செல்ல வேண்டாம் என அந்த மக்களிடம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலையால் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவிருந்த பரீட்சைகள் பிற்போடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related posts: