மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பலாலி, வளலாய்ப் பகுதிகளில் கல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

Tuesday, June 14th, 2016

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பலாலி,  வளலாய்ப் பகுதிகளில்  சட்டத்திற்கு முரணாகக் கல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெல்லிப்பழைப் பிரதேச செயலருக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பலாலி வடக்குப் பகுதிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்  அங்கு வைத்து மேற்கண்டவாறு அறிவுரை வழங்கியுள்ளார். காணி உரிமையாளர்களின் அனுமதி இன்றிக் குறித்த பகுதிகளில் கல் அகழ்வதற்குத் தடை விதிக்குமாறும் அவர் இதன் போது அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் சட்டவிரோதமாக கல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகப் பொலிஸ் நிலையம் ஊடாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Related posts: