மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கோணற்புலம் நலன்புரி நிலையத்திலும் அடையாள உண்ணாவிரதம்.
Friday, March 18th, 2016சொந்த நிலங்களில் தாம் இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு வழியமைத்து தரப்படவேண்டும் என்றும் தாங்கள் இதுவரை காலமும் அனுபவித்து வரும் சீரழிந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி கோணற்புலம் நலன்புரிமுகாமில் உள்ள மக்கள் இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வலி.வடக்கு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து மூன்று தசாப்தங்களாக நலன்புரி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்கள் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்தின் ஒரு அங்கமாக இன்று கோணற்புலம் நலன்புரி முகாம் மக்கள் கோணற்புலவு வைரவர் ஆலய முன்றலில் ஒன்றுகூடி தமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலி.வடக்கு இணைப்பாளர் இராசரத்தினம் ஜெயபாலசிங்கம் (அன்பு), வலி கிழக்கு இணைப்பாளர் இராமநாதன் ஐங்கரன், வலி தென்மேற்கு இணைப்பாளர் வெலிச்சோர் அன்டன் ஜோன்சன் (ஜீவா)ஆகியோரும் ஆதரவாக பங்கெடுத்திருந்தனர்.
பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற்றுவரும் இந்த உண்ணாவிரத போராட்டமானது கடந்தமாதம் 26 ஆம் திகதி கண்ணகி மற்றும் சபாபதி நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த அடையாளா உண்ணாவிரத போராட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்திருந்ததுடன் போராட்டத்திலீடுபட்டிருந்த மக்களுடன் கலந்துரையாடிய அதேவேளை அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
.
Related posts:
|
|