மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி முன்னெடுப்பு – யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் முரளிதரன் தெரிவிப்பு!

Friday, July 9th, 2021

உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில், மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை  திரட்டும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலதிக மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

உள்நாட்டு யுத்தத்தினால் “யாழ் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து தற்போதும் வேறு பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்களின் விபரங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன.

மேலும் பல்வேறு பிரதேசங்கள் குறித்த மக்களை மீள் குடிமர்த்துவதற்கு அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மீள்குடியமராத குடும்பங்கள் தொடர்பான விபரங்கள் அவர்கள், தற்போது வசிக்கும் பிரதேச செயலகங்களினால் தற்போது இற்றைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆகவே இடம்பெயர்ந்து இதுவரை காலமும் மீள்குடியமராத மக்கள், தங்கள் வசிக்கும் பிரதேச செயலகத்துக்குச் சென்று, தமது பெயர் குறிக்கப்பட்ட பட்டியல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுமாறு  அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: