மீளாய்வு பெறுபேறுகளுக்கமைய 2020 – 2022 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக பதிவுகள் ஆரம்பம்!

Thursday, February 10th, 2022

பரீட்சை திணைக்களத்தினால் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகளுக்கு அமைய 2020 – 2022 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.

அதற்கமைய, கடந்த 4 ஆம் திகதியன்று வெட்டுப்புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, உரிய கல்வி பீடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோர், www.ugc.ac.lk என்ற இணையத்தளம் வழியாக எதிர்வரும் 15 ஆம் திகதிவரை தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: