மீறினால் கைது – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

Tuesday, March 31st, 2020

அலுவலகங்களில் பெற்றுக்கொடுக்கப்படும் அடையாள அட்டை அல்லது ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தின் போது வழங்கப்படும் அனுமதி சீட்டு இன்றி பொது இடங்களில் அல்லது வீதிகளில் நடமாடும் நபர்கள் கைதாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மேற்குறிப்பிட்ட ஆவணங்களின்றி நடமாடுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: