மீன் பொதியிடல் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – கடற்றொழில் நீரியில் வள அமைச்சு!

Friday, May 4th, 2018

நாட்டில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் நாட்டின் மீன் பொதியிடல் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 34 இல் இருந்து 68 ஆக அதிகரித்திருப்பதாக கடற்றொழில் நீரியில் வள அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த மீன் ஏற்றுமதிக்கான தடையின் காரணமாக நாட்டின் மீன் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்திருந்ததுடன் மீன் பொதியிடல் தொழிற்சாலை பெருமளவு மூடப்பட்டிருந்தது.

கடந்த காலப்பகுதியில் மீன் ஏற்றுமதி மற்றும் அதன் மூலமான வருமானம் அதிகரித்ததைத் தொடர்ந்து மீன் பொதியிடல் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

நாட்டின் ஏற்றுமதி செய்யப்படும் டுனா மீனை போன்று இறால், நண்டு போன்றவற்றுக்கு சர்வதேச ரீதியிலுள்ள கோரிக்கை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:

குடாநாட்டில் அடுத்த ஆண்டு மீள்குடியேற்றம் முடிவுறும் - யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மகேஷ் சேனாநாயக்க!
நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் - ஈ.பி.டி.பியிடம் திருமலை மனையாவெளி கடற...
பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் தொடர்பில் இவ்வாரம் வெளியாகும் - பல்கலைக்கழக மானியங்க...