மீன் ஏற்றுமதி மூலம் 106 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் – இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவிப்பு!

Thursday, August 19th, 2021

இலங்கையில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும், கடந்த மாதத்தில் உணவுக்கான மீன் ஏற்றுமதியின் ஊடாக 106 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெறப்பட்டதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் மீன் ஏற்றுமதி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7% பங்களிப்பு செய்கிறது. கொவிட் தொற்று பரவலுக்கு மத்தியிலும், இந்த ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா, ஜேர்மன், இங்கிலாந்து, ஜப்பான், நெதர்லாந்து, ஹொங்கொங், கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இலங்கை மீன்களுக்கு அதிக கேள்வி இருப்பதாகவும் அவர் கூறுகின்றனர்.

தற்போது பிரான்ஸ் நாட்டில் இருந்தே அதிகமான கேள்வி காணப்படுகின்றது. அந்நாட்டிலிருந்து 23 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெற்றப்பட்டதாகவும் சபை தெரிவித்துள்ளது.

கொவிட் முதல் அலை ஆரம்பித்து, கடந்த ஆண்டு இறுதிவரையிலும்  இந்த ஏற்றுமதி செயல்முறை தடைபடவில்லை. அந்த ஆண்டிலேயே 189 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.

கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட மீன் ஏற்றுமதியில் 2018ம் ஆண்டே அதிக வருமானம் கிடைத்துள்ளது. இத்தொகை 265 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: