மீன்பிடித் துறை அபிவிருத்திக்கு தொழில்நுட்ப உதவி!

இலங்கையிடம் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு சீசேல்ஸ் கோரியுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் திலிப் வெதஆராச்சியை இலங்கைக்கான சீசேல்ஸ் தூதுவர் கொண்ராட் மெடிறிக் அண்மையில் சந்தித்துள்ளார்.
சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடி என்பன தமது நாட்டுக்கு வருமானம் வரும் முக்கிய துறைகள் என்றும் மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக குளிரூட்டல் தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும் சீஷேல்ஸ் தூதுவர் கோரியுள்ளார்.
இந்த நிலையில் சீஷேல்ஸுக்கு குறித்த உதவிகளை இலங்கை வழங்குதாக மீன்பிடித்துறை அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.
Related posts:
பிரதமர் இன்று இந்தோனேசியா பயணம்!
இன்றும் கடும் மழை பெய்யும் - வானிலை அவதான நிலையம்!
கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு!
|
|