மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமானதாக்க நடவடிக்கை – மீன்பிடித்துறை அமைச்சு!

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மீன்பிடித்துறை அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.
இதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்துக்கு உள்நாட்டில் 22 கொள்வனவு மற்றும் விற்பனை நிலையங்கள் உள்ளன.
அவற்றில் 8 நிலையங்கள் மாத்திரமே இலாபகரமாக இயங்குகின்றன.
மேலும் அதன் தலைமை அலுவலகத்தில் மாத்திரம் 244 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இவ்வாறு அதீத பணியாளர்களை கொண்டுள்ளமையும், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் நட்ட நிலைமைக்கு காரணம் என்று மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
மின்தடை பற்றிய அறிவித்தல்!
டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்தபோதே வடக்கு மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்த...
முதியவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல தயங்க வேண்டாம் - பிரதி சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம் ...
|
|