மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஐந்து நாட்களின் பின் சடலமாக மீட்பு!

Tuesday, March 13th, 2018

மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடுப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஐந்து நாட்களின் பின்னர் இன்றைய தினம்(13) சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.

குறித்த மீனவர் கடந்த-09 ஆம் திகதி மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றிருந்தார். அவரது படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் முன்னர் கரை ஒதுங்கிய போதிலும் குறித்த குடும்பஸ்தர் தொடர்பான எதுவித தகவலும் வெளியாகவில்லை.

இதனையடுத்துச் சக மீனவர்கள் இணைந்து குறித்த மீனவரைக் கடலுக்குள் சென்று தேடிய போதும் எதுவும் தெரியவராத நிலையிலேயே இன்று அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடுப் பகுதியைச் சேர்ந்த யூலி அலக்சன்(வயது-38) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

Related posts: