மீன்களின் விலையில் கட்டப்பாடு!

Tuesday, April 10th, 2018

பண்டிகைக்காலங்களில் அதிகரித்து வரும் மீன் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

விதிமுறைகளை மீறி அதிக விலைகளில் மீன்களை விற்பனை செய்வர்களை சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பண்டிகைகாலமான இந்த மாதத்தில் 4 வகையான மீன்களின் விலைகளை குறைப்பதற்கு கடற்றொழில் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: