மீனவர் மரணம் குறித்து முழு விசாரணை – ஜனாதிபதி!

Thursday, March 9th, 2017

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக, இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி கூறியுள்ளார்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி, அங்கு இந்திய துணை குடியரசுத் தலைவரை சந்தித்த போதே இதனைக் குறியுள்ளதாக தி ஹிந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு நாள் ஜகார்தா பயணத்தை முடித்து இந்தியா திரும்புகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹமீது அன்சாரி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை கடற்படை தளபதியிடம் பேசினேன். இலங்கை கடற்படை அம்மாதிரி எந்த நிகழ்வும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளது. மேலும் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்று கூறினார்.

மேலும் மீனவர்கள் தொடர்பாக அடிக்கடி எழும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய துணை குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: