மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு!

Friday, April 28th, 2017

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாராட்டியுள்ளார்.

இது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும்ச,கோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு, இரு தேச மக்களுக்கும் பரஸ்பர அனுகூலம் தரக்கூடிய அடிப்படை ஆவணமென ஸ்வராஜ் அம்மையார் தெரிவித்தார். அவர் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பை அடுத்து கருத்து வெளியிட்டார். இந்த சந்திப்பு புதுடெல்லியில் இடம்பெற்றது.

இந்தியா, ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளுக்கு மத்தியில் வருவான பிணைப்புகள் நிலவுகின்றன. எனவே இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் மூன்று நாடுகளும் இணைந்து பணியாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏராளமென இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகளை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு மட்டங்களிலும் அவற்றை வலுப்படுத்துவது அவசியமென பிரதம மந்திரி சுட்டிக்காட்டினார். அரச, தனியார் துறை தொழில் முயற்சிகள், முதலீடுகள், கல்வி, கலாசாரம், தொழில்நுட்;பம் முதலான துறைகளில் உளவுகளை வலுப்படுத்த வேண்டுமென அவர் கூறினார்.

Related posts: