மீனவர்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை!

விடுதலை செய்யப்பட்ட 77 இந்திய மீனவர்களையும் இன்று அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
காங்சேன்துறை துறைமுகத்தினூடாக சர்வதேச கடல் எல்லையில் அவர்களை, அந்நாட்டு கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 77 பேரும் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்பட்டனர்
Related posts:
குடாநாட்டில் மாணவிகளை இலக்கு வைக்கும் கும்பல்: விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்து!
ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிடம் பில...
நாட்டின் நிதி நெருக்கடிக்கு அரசு மட்டுமே பொறுப்பல்ல - நாடாளுமன்றம் மூலமே தீர்வு காண்பது அவசியம் - அம...
|
|