மீனவர்களுக்கு கைக்கணனிகள்!

Wednesday, November 23rd, 2016

இலங்கை மீனவர்களுக்கு கைக்கணனி வழங்கப்பட உள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மட்டக்குளியில் நடைபெற்ற மீனவர்களுக்கான வானொலி சேவையொன்று ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக மீன்களை கண்டறியும் கருவி கடல் நடுவில் ஏற்படக்கூடிய விபத்துக்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் கருவி ஆகியனவற்றுக்கு மேலதிகமாக கைக்கணனிகள் வழங்கப்படவுள்ளன. இரண்டு ஆண்டு காலப் பகுதியில் மீனவர்கள் அனைவருக்கும் சொந்த வீடுகள் மற்றும் உட்கட்டுமான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மீனவர் சமூகத்திற்கு நவீன சாதனங்கள் பொருத்தப்பட்ட படகுகள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

30012

Related posts: