மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவு – சொத்து விபரங்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்!
Monday, April 17th, 2017மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவு காரணமாக பாதிப்புக்கு உள்ளான சொத்து விபரங்களை மதிப்பிடும் பணிகள் இன்று(17) முதல் இடம்பெறவுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், கொழும்பு மாவட்ட செயலகம் மற்றும் கொலன்னாவ பிரதேச பொதுச் செயலக காரியாலய அதிகாரிகளை இந்த பணிகளில் ஈடுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அபாய பகுதிகளில் வாழும் மக்களை இனங்கண்டு, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் நடடிவடிக்கைகளும் இடம் பெறவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மீதொட்டமுல்ல சம்பவம் தொடர்பான இழப்பீட்டு அறிக்கையை 5 தினங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(16), அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்கத்கது.
Related posts:
விரைவில் புதிய 'வற்'வரி சட்டமூலம்! - பிரதமர்
மாலை 6 மணிக்கு கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான தீர்ப்பு !
மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளது - முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் குற்றச்சாட்டு!
|
|