மீதொட்டமுல்ல அனர்த்தம்: 06 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

Saturday, April 15th, 2017

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. சிங்கள, தமிழ் புது வருட தினமான நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற குறித்த அனர்த்தத்தில் 04 ஆண்கள், 06 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த அனர்த்தம் காரணமாக சுமார் 180 பேர் நிர்க்கதியாகியுள்ள நிலையில், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர்ந்தும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: