மீண்டும் 800 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை!
Sunday, October 16th, 2016
இலங்கையர்கள் 800 பேருக்கு நாளை இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரஜைகள் பிரிவின் பிரதி கட்டளையாளர் ஷாமிக கமகே தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியம், சுவி்ட்ஸர்லாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கே இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை ஆயிரக்கனக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், கட்டம் கட்டமாக அவர்களுக்கான இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி கட்டளையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 17,500 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரஜைகள் பிரிவின் பிரதி கட்டளையாளர் ஷாமிக கமகே தெரிவித்துள்ளார்.
Related posts:
திருத்தப்பட்ட ‘வற்’ சட்டமூலம் வரும் 26ஆம் திகதி சமர்ப்பிப்பு – நிதியமைச்சர்!
திட்டமிட்டபடி ஆசிரியர்களின் போராட்டம்!
வெங்காயம் - டின் மீன்களுக்கான விசேட பண்ட வரியில் திருத்தம் - அரசாங்கம் நடவடிக்கை!
|
|