மீண்டும் 16 இந்திய மீனவர்கள் கைது!

பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்’திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (11) கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
கைதுசெய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் நாகை மாவட்டத்தினைச் சேர்ந்தவர்களென தெரியவரவதடன். இவர்களிடமிருந்து இரண்டு மீன்பிடி படகுகள் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று அவர்களுடைய பதிவுகளை மேற்கொண்ட பின்னர் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீரியல் வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
2018ஆம் கல்வி ஆண்டிற்கான பாடசாலை தவணைகளின் அட்டவணை வெளியீடு!
யாழில் மாமியாரை தாக்கிய மருமகன்!
கொரோனா பரவல் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளில் தளர்வு - இன்றுமுதல் புதிய வழிகாட்டி...
|
|