மீண்டும் வாள்வெட்டு: மானிப்பாயில் சம்பவம்!

Tuesday, June 27th, 2017

மானிப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மக் குழுவொன்று மானிப்பாய் ஆனந்தன் வைரவர் சந்தியில் திங்கட்கிழமை இரவு இந்த தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான மேசன் தொழிலாளியான அந்தோனிப்பிள்ளை டினரொக்ஷன் (வயது – 26) என்பவர் வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினரே இத் தாக்குலை நடத்தியுள்ள நிலையில் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: