மீண்டும் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்!

தற்போது இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில்இ வாகனங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம்தெரிவித்துள்ளது.
அதற்கமைய எஞ்ஜின் திறன் குறைவான வாகனத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாவினாலும் எஞ்ஜின் திறன் அதிகமான வாகனங்களின் விலை ஒன்றரை அல்லது இரண்டு இலட்சம்ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெகன்ஆர் வாகனம் ஒன்று ஒரு இலட்சம் ரூபாவாலும்இ டொயோட்டா விட்ஸ் வாகனம் இரண்டு இலட்சம் ரூபாவாலும் அதிகரிக்கப்பட்ட பெறுமதியுடன் விற்பனைசெய்யப்படவுள்ளது.
மேலும் அரசியலில் கடந்த நாட்களில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக ரூபாய் பாரிய வீழ்ச்சியை சந்தித்ததோடு அதன் தாக்கத்தால் வாகனங்களின் விலை பாரியளவில்அதிகரித்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
2017 இல் உள்ளூராட்சி தேர்தல்!
டக்ளஸ் தேவானந்தாவினால் மட்டுமே தமிழர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் - வே...
திருகோணமலையில் 5 தாதியருக்கு கொரோனா - ஐந்து பாடசாலைகள் பூட்டு!
|
|