மீண்டும் வளர்ச்சியை நோக்கி மோட்டார் வாகன பதிவுகள்!

Monday, May 8th, 2017

கடந்த மூன்று மாதங்களுக்குள் நாட்டின் வாகன பதிவுகள் பாரிய வளர்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மார்ச் மாதம் மாத்திரம் 39,173 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களே இவற்றுள் அதிக வளர்ச்சியை காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.  பெப்ரவரி மாதத்தினுள் புதிய மோட்டார் வாகனங்கள் 786 பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அது இந்த மாதத்தினுள் 936 வரை அதிகரித்துள்ளது.அத்துடன் மோட்டார் வாகனங்களின் பதிவுகளும் பெரிய அளவிலான வளர்ச்சியை காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பெப்ரவரி மாதத்தில் பதிவாகிய 1362 என்ற அளவுடன் ஒப்பிடும் போது அது 2025 வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: