மீண்டும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை?

Wednesday, August 15th, 2018

நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே என்ஜின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து சம்பள பிரச்சினை தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை என ரயில்வே என்ஜின் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் மீண்டும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிஸ்கரிப்பு தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள ரயில்வே தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசாங்க ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த வாரம் மூன்று நாட்களாக திடீரென முன்னெடுக்கப்பட்ட ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: