மீண்டும் யுத்தத்திற்கு வழிகோலும் இனவாத மதக் குழுக்கள் இருப்பது துரதிஸ்டம் – அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!

Tuesday, December 13th, 2016

நாட்டில் மீண்டுமொரு யுத்தத்திற்கு வழிகோலும் மதக் குழுக்கள் இருப்பது எம் இனத்தின் துரதிஸ்டம் என, துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கிராமத்து விகாரையே கிராமத்தின் சக்தி எனும் வேலைதிட்டத்தின் மூன்றாம் கட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இக் கருத்தை தெரிவித்துள்ளார்..

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,  அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக போதிய விளக்கமின்றி ஒரு சிலர் மேற்கொள்கின்ற கருத்துக்கள் காரணமாக இன்று இனங்களிடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நாட்டில் இன, மத பாகுப்பாடுகளை தூண்டுபவர்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளார்கள். இன்று அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் எவ்வித முடிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை. பல்வேறுபட்ட யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. எவ்வத இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

பௌத்தர்கள் போன்று இவ்வாறு பிற மதத்தவர்களும் செயற்படுகின்றார்கள். அரசியல் யாப்பினை பற்றி அறியாத எம் நாட்டு மக்களின் மனங்களை குழப்பாதிருக்குமாறு நான் இவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன், என தெரிவித்துள்ளார்.

1786697740Untitled-1

Related posts: