மீண்டும் யாழில் ஆவாகுழு அட்டகாசம் – அச்சத்தில் மக்கள்!

Tuesday, July 9th, 2019

கொக்குவில் பிடாரி கோவிலடி பகுதியில் நேற்று நள்ளிரவு தொடா்ச்சியாக 3 வீடுகளுக்குள் புகுந்த ஆவா குழு ரவுடிகள் வீடுகளை அடித்து நொருக்கியுள்ளனர்.

அத்துடன், வீட்டிலிருந்தவா்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலுக்கு அண்மையாக உள்ள மூன்று வீடுகளில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது.

3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வன்முறைக் கும்பல், வீடுகளின் படலை, யன்னல்கள் உள்பட பெறுமதியான தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: