மீண்டும் மாணவர்களுக்கு சீருடைகள்.!

Wednesday, April 13th, 2016

கஷ்ட, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தூர கிராம பாடசாலைகளின் மாணவர்களுக்கு இவ்வருடத்தின் நடுப்பகுதியில் மேலதிகமாக சீருடைகள் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வியமைச்சினால் வெளியிடப்பட்ட விசேட சுற்று நிருபத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் நலன்கருதியும், தரமான சீருடைகளை வழங்கும் நோக்குடனும் இவ்வருடத்தின் நடுப்பகுதியில் மேலதிகமாக சீருடைகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாட்டிலுள்ள 4,471 பாடசாலைகளுக்கு குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் கடந்த ஆண்டுகளில் பகிர்ந்தளிக்கப்பட்ட சீருடைகளில் தரமற்ற புடவைகளுக்கு பதிலாக மாற்றீட்டு சீருடைகளை வழங்கவும் இந்த இந்த திட்டத்தின் மூலமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 12 இலட்சத்துக்கும் அதிகமான சீருடைகள் கல்வியமைச்சின் களஞ்சியசாலையில் இருப்பில் உள்ளது. குறித்த சீருடைகளை வறிய மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் முகமாகவே குறித்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி குறித்த வேலைத்திட்டம் பாடசாலைகளின் இரண்டாவது தவணைக்காலம் நிறைவு பெறுவதற்கு முன்னதாக மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது

Related posts: