மீண்டும் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு அழைப்பு!

Sunday, August 21st, 2016

மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உட்பட மத்திய வங்கி அதிகாரிகளையும் செவ்வாய்கிழமை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த வாரம் மத்திய வங்கி அதிகாரிகள் கோப் குழுவில் முன்னிலையாகியிருந்தார்கள் என்றும், மேலும் சில விசாரணைகளுக்காகவே இவர்களை கோப் குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதாகவும் அசோக அபேசிங்க கூறியுள்ளார்.மேலும் மத்திய வங்கியின் திறைசேரி செயலாளர் மற்றும் நிதி குழு உறுப்பினர்களையும் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்பிலான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: