மீண்டும் போராட்டம் – எச்சரிக்கும்  பெற்றோலிய தொழிற்சங்கங்கள்!

Friday, May 5th, 2017

தமக்கு அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மறு அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மூன்று பிரதான கோரிக்கைகளின் கீழ் கடந்த மாதம் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தன. இதன்போது குறித்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அளித்த எழுத்துமூல வாக்குறுதியையடுத்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது.

எனினும், இன்றுவரை தீர்வுக்கான எந்தவொரு அறிகுறியும் தென்படாததால் தங்கள் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்திருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜயந்த பரெய்கம தெரிவித்துள்ளார்