மீண்டும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், சில நிபந்தனைகளின் கீழ் பொதுப் போக்குவரத்தை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என்று போக்குவரத்துச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதன்படி, பயணிகளை எவ்வாறு பாதுகாப்பாகவும், சுகாதார நடைமுறைகளோடு அழைத்து செல்வது என்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயணிகள் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய அழைத்து செல்லப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் மாகாணங்களுக்கு இடையேயான சேவையில் தனியார் பேருந்துகளும் ஈடுபட முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், 200 ஆயிரம் ரூபாவிற்கு அதிகமான மானியம் வழங்க தனியார் பேருந்து சங்கங்களுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
பாடசாலைகள் மீள திறக்கப்பட்டதன் பின்னர் ஆரம்பப்பிரிவு மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளிகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் தனியார் வாகனங்களையும் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
|
|