மீண்டும் புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்!

Friday, May 4th, 2018

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் சீனாவின் தயாரிப்பிலான பெட்டிகள் பொருந்திய ரயில் சேவையில் ஈடுபடபோவதில்லை என ரயில் சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொடதெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் களனிவெளி ரயில் பாதையுடனான போக்குவரத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரயில் சாரதிகளின் சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரயில் சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

Related posts: