மீண்டும் புகையிரத ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!
Monday, May 21st, 2018எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களத்தின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
சம்பளப் பிரச்சினை மற்றும் வெற்றிடங்கள் உள்ள பதவிகளுக்கு புதியவர்களை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படாமை போன்ற விடயங்களை முன்வைத்து தங்களின் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
குறித்த வேலை நிறுத்தத்தில் பயணிகளுக்கான பயணச் சீட்டு வழங்குனர், பொதிகள் பரிசோதகர், புகையிரத நிலைய சமிக்ஞை பணியாளர்கள் போன்றோர் ஈடுபடவுள்ளதால் புகையிரத சேவைகள் முற்றாக பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே சில தினங்களில் பௌத்தர்களின் பொசொன் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் குறித்த வேலை நிறுத்தம் காரணமாக அநுராதபுரத்துக்கான விசேட ரயில் சேவைகளும் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
|
|