மீண்டும் பாதை சேவை ஆரம்பம்!

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையில் கடல்வழி சேவையில் ஈடுபட்டு பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்த பாதை புதன்கிழமை (20) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பியது.
இந்தப் பாதைச் சேவையானது, நாளொன்றுக்கு 6 தடவைகள் என்ற ரீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால், இலவசமாக நடத்தப்பட்டது. இதன் மூலம் பயணிகள், மோடடார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியவற்றை கொண்டுச் செல்லக்கூடியதாக இருந்தது.
எனினும் கடந்த மார்ச் மாதம் முதலாவது வாரம் தொடக்கம் இந்தப் பாதை பழுதடைந்தது. இதனால், இரண்டு இடங்களுக்கும் கட்டண அடிப்படையிலான படகு சேவை ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், பழுதடைந்த பாதையை திருத்தம் செய்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், அதனை மீண்டும் சேவையில் இணைத்துள்ளனர்.
Related posts:
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை தயாரித்தவர் சட்டம் பற்றி அறியாதவர் -அமைச்சர் ராஜித்த!
இந்திய அரசு குறித்து த.தே.கூட்டமைப்பின் உண்மை நிலைப்பாடு என்ன? - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக ந...
கஜா புயல் 15ம் திகதி கரையைக் கடக்கும் : இலங்கையின் வடபகுதிக்கும் பாதிப்பு?
|
|