மீண்டும் பாடசாலை செயற்பாடுகளை அச்சுறுத்தும் கொரோனா : இலங்கையில் 450 பாடசாலை மாணவர்கள் சுயதனிமைப்படுத்தலில்!

Saturday, August 1st, 2020

பொலநறுவை, கிரிதலேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் 450 மாணவர்களும் 82 ஆசிரியர்களும் 7 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியினால் குறித்த நோயாளியுடன் நெருங்கி செயற்பட்ட ஆசிரியர் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் இதுவரையில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த நாட்களில் பாடசாலைகளில் கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கிரிதலேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் 450 மாணவர்களும் 82 ஆசிரியர்களும் 7 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இலங்கையில் கொரோனா தொற்றுடன் ஒருவர் இலங்கையில் அடையாளர் காணப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தம் மூடப்பட்ட நிலையில் எதிர்வரும் 10 ஆம் திகதியிலிருந்து அது மீள ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இவ்வாறு மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: