மீண்டும் பாடசாலைக்கு சென்ற கையினை இழந்த வைசாலிக்கு பாடசாலை மாணவர்களால் மகத்தான வரவேற்பு!

Tuesday, September 19th, 2023

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கவனக்குறைவினால் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதனால் தனது கையினை இழந்த வைசாலி இன்று மீண்டும் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியான சாண்டில்யன் வைசாலி இன்று மீண்டும் தனது கற்றலைத் தொடர்வதற்காக பாடசாலைக்கு சமூகமளித்த போது சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

வைசாலி இன்று பாடசாலைக்கு சென்ற போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகம் அவரை பூங்கொத்து வழங்கி வரவேற்றார்கள்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவத்தின் மூலம் தனது கையின் ஒரு பகுதியை இழந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களினால் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் வைசாலிக்கு இந்த வரவேற்பு மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் வழங்குவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: