மீண்டும் பணிபகிஸ்கரிப்புக்கு தயாராகும் தபால் ஊழியர்கள்!

Tuesday, January 3rd, 2017

எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் தாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் . தவறும் பட்சத்தில் மீண்டும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தபால் ஊழியர்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் சின்தக பண்டா தெரிவித்துள்ளார்.

தபால் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்த 14 நாள் கால அவகாசம் எதிர்வரும் 6ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 21 ஆயிரம் தபால் ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் 7ம் திகதி இதுதொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1943355455Untitled-1

Related posts:


கொரோனா அச்சுறுத்தலால் முடக்கப்பட்ட தீவகத்தின் பல பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு ஈ.பி.டி.பியினரால் உ...
எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவில் வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை உருவாகும் - ஐக...
மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் இன்று முன்னெடுப்பு – நாளைமுதல் தொடருந்து சேவைகளும் வழமைக்கு ...