மீண்டும் நாட்டை மூடுவதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாது – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவிப்பு!

Tuesday, July 20th, 2021

எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்று நோய்கள், கொவிட்19 நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் தமது இயல்பு வாழ்க்கையினை கொண்டு செல்வதற்கு பழக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும், பாதிப்பு இன்னும் குறைவடையவில்லை என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தடுப்பூசி செலுத்தப்பட்ட பல நாடுகளில் டெல்டா கொரோனா வைரஸ் திரிபினால் பாதிப்பேற்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தடுப்பூசி செலுத்துவதன் ஊடாக உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதை போலன்றி, கிரமமான முறையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: