மீண்டும் தொடருந்து சேவை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Wednesday, May 23rd, 2018தொடருந்து சேவையின் 3ஆம் தர பணியாளர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தொடருந்து நிலைய சமிக்ஞையாளர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யு.ஜீ.வை.எஸ். ஜயமான்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
சம்பள பிரச்சினை மற்றும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளாமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்தப் பணிப்புறக்கணிப்பினை தொடருந்து நிலைய சமிக்ஞையாளர்கள், தொடருந்து பயண அனுமதிப்பத்திர சேகரிப்பாளர்கள், பொருட்கள் பரிசோதகர்கள் ஆகியோர் இணைந்து மேற்கொள்வதாகஅவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
1 கோடியே 17 லட்சம் ரூபா பணத்தினை வாங்கியவர்கள் ஏமாற்றியதனால் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய் மற்றும...
மேலும் பலருக்கும் நிவாரண தொகை வழங்க அரசாங்கம் தீர்மானம்!
வரையறையில்லாத அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்லுவதே இலக்கு - ஜனாதிபதி செயலக தொழில் விவகாரங்களின் ...
|
|