மீண்டும் திறக்கப்படும் கட்டுவாபிட்டி புனித செபஸ்தியன் தேவாலயம்!
Sunday, July 21st, 2019ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுதாக்குதலினால் பாதிக்கப்புக்குள்ளான நீர்கொழும்பு – கட்டுவாபிட்டி புனித செபஸ்தியன் தேவாலயம் புனரமைப்பு பணிகளுக்கு பின்னர் திறந்து வைக்கப்பட உள்ளது.
கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று முற்பகல் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விசேட ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை 8.45 மணியளவில் முதல் தாக்குதல் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பதிவானது.
தொடர்ந்து மட்டக்களப்பு – சியோன் தேவாலயம், நீர்கொழும்பு – கட்டான கட்டுவாப்பிட்டிய தேவாலயம், கொழும்பில் சினமன் கிராண்ட் ஹோட்டல், சங்கரில்லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், தெஹிவளை ட்ரொபிகல் இன், தெமட்டகொடை மகவில பூங்கா போன்ற பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் இத்தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்று இன்றுடன் 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ளது.
Related posts:
|
|