மீண்டும் திருத்தப்படும் ஹம்பாந்தோட்டை உடன்படிக்கை?

Tuesday, April 11th, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதெற்கனெ நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு, 99 வருட குத்தகையை 50 வருடங்களாக குறைக்கும் முன்மொழிவு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை தொடர்பில் அமைக்கப்பட்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான அமைச்சரவை உப குழு கடந்த வாரம் சந்தித்து கலந்துரையாடியிருந்தது.

சீனாவின் மேஜ்சன்ட்ஸ் போட்ஸ் ஹோல்டிங் நிறுவனத்திற்கு 80 வீத பங்குகளை வழங்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையில் மேற்கொள்ள வேண்டியவை என முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து குறித்த குழு ஆராய்ந்துள்ளது.

இந்த உடன்படிக்கை தொடர்பான விடயங்கள் இறுதிப்படுத்தப்பட்ட பின்னர், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட உள்ளுர் நிறுவனத்திற்குள் சீனாவின் மேஜ்சன்ட்ஸ் போட்ஸ் ஹோல்டிங் நிறுவனத்திற்கு இடையில் உடன்படிக்கை கையெழுத்திடப்பட வேண்டும் என அமைச்சரவை உப குழுவிற்கு நெருக்கமான தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இலங்கை துறைமுக அதிகார சபையுடன் சட்டரீதியாக உடன்படிக்கை செய்வது சாத்தியமற்றது என்பதாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை குத்தகை காலத்தை 50 வருடங்களாக குறைப்பதற்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விரும்புவதாக அமைச்சரவை உப குழுத் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அத்துடன் துறைமுகத்தின் பாதுகாப்பும் இலங்கை கடற்படை வசமே இருக்க வேண்டும் எனவும் உடன்படிக்கை திருத்த முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் ஏற்கனவே உள்ள ஹம்பாந்தோட்டை துறைக உடன்படிக்கை 60 க்கு 40 அல்லது 80 க்கு 20 என்ற வீதத்தில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனைத்து முன்மொழிவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுவருவதுடன், ஆழ்ந்த கலந்துரையாடல்களின் பின்னர் இறுதி தீர்மான வரைவு ஏற்படுத்தப்படும் எனவும் அமைச்சரவை உப குழுத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

Related posts: