மீண்டும் தாயகம் எங்கும் போராட்டம் வெடிக்கும் என்று கூறியது இதுதானா – வலி.வடக்கு மக்கள் ஆதங்கம்!

Monday, June 20th, 2016

தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்போம் அவர்களை மீள்குடியேற்றுவோம், மக்கள் பகுதியிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவோம், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்போம் இல்லையேல் தமிழர் தாயகம் எங்கும் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என பல்வேறு வாக்குறுதிகளை மக்கள் முன்வைத்து தேர்தல் வெற்றிகளை பெற்றதுடன் தற்போதைய அரசாங்கத்தை தாமே அமைத்தனர் என தம்பட்டம் அடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று மக்களுக்கு தாம் வழங்கிய உறுதிமொழிகளையும் மக்களது தேவைப்பாடுகளையும் மறந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை கொண்டு தமது பிள்ளைகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அலங்கரித்து வருவது தமக்கு விசனத்தையும் வேதனையையும் தருவதாக வலி.வடக்கு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அண்மையில் மீள்புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கை விளையாட்டு துறைசார்ந்தவர்களிடம் கையளிக்கும் பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார்.

தேர்தல்கால வாக்குறுதிகள் யாவும் வெறும் வாக்குறுதிகளாகவும் செயலற்றுப் போனதாகவுமே தற்போது எண்ண முடிகின்றதாக சுட்டிக்காட்டிய மக்கள்  எதிர்காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வாக்குறுதிகளை நம்பி தாம் ஏமாறத் தயாராக இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எமக்கான உரிமைகளை பெற்றுத்தருவோம் என கூறியவர்கள் இன்று அவற்றை செயற்படுத்த முடியாது தமது சுகபோக சுயநல வாழ்க்கைகளையே பிரதானமாக கொண்டு செயற்பட்டுவருகின்றனர்.

கடந்த காலங்களில் டக்ளஸ் தேவானந்தா இணக்க அரசியல் செய்து அதன் மூலமாக மக்கள் பணிகளை முன்னெடுத்தபோது அதனை எள்ளிநகையாடியவர்கள் அதே இணக்க அரசியல் மூலமாக வாக்களித்த  தங்களை மறந்து தமது பதவிகளை தக்கவைத்து சுகபோகங்களை அனுபவித்து வாழ்ந்துவரும் நடைமுறையானது எந்தவகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இடம்பெயர்ந்த நிலையில் வலி.வடக்கு மக்களாகிய நாம் நலன்புரி நிலையங்களில் பல்வேறுபட்ட வசதியீனங்களுடன் அவல வாழ்வை வாழ்ந்துவரும் நிலையில்  யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த ஜனாதிபதியை கொண்டு எமது பிரச்சினைகள் இடர்பாடுகள் குறித்து அவரிடம் எடுத்துக்கூறாது தமது பிள்ளைகளின் பிறந்ததின விழாக்களை கொண்டாடியது கண்டிக்கப்பட வேண்டும் என்று ஆதங்கத்துடன் எமது செய்தியாளரிடம் குறித்த பகுதி சிவில் சமூக பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

03

 01

Related posts: