மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்!

Wednesday, April 11th, 2018

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் திரும்பவும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வருடத்தின் முதலாவது நுளம்பு ஒழிப்பு வாரம் நேற்று நிறைவு பெற்றது. இதன் போது 4 லட்சத்து 58 ஆயிரத்து 912 இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் நுளம்பு பெருக்கத்திற்குஏதுவான 98 ஆயிரம் இடங்கள் இனங்காணப்பட்டதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் டெங்கு தொற்று மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதுகுறித்து அவதானத்துடன் செயற்படுமாறு தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் பிரஷிலோசமரவீர தெரிவித்துள்ளார்.